• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு

வெள்ளம்

இலங்கையில் ஏற்படுகின்ற பாரிய வெள்ளங்கள் இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளுடன் சம்பந்தப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக, தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலத்தில் (மே-செப்டம்பர்) மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடியவையாகும். வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலத்தில் (டிசம்பர்-பெப்ரவரி) கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடியவையாகும். இந்தக் காலப்பகுதியில் மலை சார்ந்த மத்திய பிரதேசங்களில் மேற்குச் சரிவுப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள் குறிப்பாக களுகங்கை மற்றும் களனி கங்கை ஆகிய தாழ்ந்த வெள்ளச் சமதரைகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றன.

வெள்ளம் ஏற்படுகின்றபோது எச்சரிக்கை வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள முகவர் நீர்ப்பாசனத் திணைக்களமாகும். வெள்ளச் சூழ்நிலைகள் பற்றிய விபரங்களைப் பெறுவதற்கு தொடர்பு கொள்க –
பணிப்பாளர் நாயகம், நீர்ப்பாசனத் திணைக்களம் (தொலைபேசி:
பிரதிப் பணிப்பாளர் (நீரியல்), நீர்ப்பாசனத் திணைக்களம் (தொலைபேசி:

அனைத்து அனர்த்தச் சூழ்நிலைகள் தொடர்பாகவும் தகவல் தொடர்புகளுக்கு –
அவசரகால செயல் நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (தொலைபேசி:
வெள்ளம் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர்
§ தரைமட்டத்தை உயர்த்தினாலன்றி, வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணிப்பதைத் தவிர்க்கவும்
வெள்ளத்தின்போது.

வெள்ளக் காலத்தில்
* சமகால தகவல்களுக்காக வானொலியைக் கேட்கவும் அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவும்.
* திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுமாயின் உடனடியாக உயர்வான இடங்களுக்குச் செல்லுங்கள். செல்வதற்கான அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.
* திடீர் வெள்ளம் ஏற்படுகின்ற நீரோடைகள், வடிகான் கால்வாய்கள், நதிகள், மற்றும் ஏனைய பிரதேசங்களைப் பற்றி அறிந்து வைத்திருங்கள். இந்தப் பிரதேசங்களில் திடீர் வெள்ளம் எச்சரிக்கையுடனோ, எச்சரிக்கை இன்றியோ ஏற்படலாம்.

நீங்கள் வெளியேறுவதற்குத் தீர்மானிப்பதாயின், நீங்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்:
* உங்கள் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசியப் பொருட்களை மேல் மாடி ஒன்றுக்கு அல்லது உயர்வான இடத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்
* பிரதான ஆளியின் மூலம் கருவிகளை மூடி விடுங்கள். மின் உபகரணங்களுக்கான மின் வழங்கலைத் துண்டித்து விடுங்கள். ஈரமாக இருப்பின் அல்லது நீங்கள் நீரினுள் நின்றுகொண்டிருப்பின் மின் உபகரணங்களைத் தொடவேண்டாம்.

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருப்பின் வெளியேறுதல் பற்றிய பின்வரும் குறிப்புகளை நினைவில் கொள்க:
* ஓடிக்கொண்டிருக்கும் நீரின் ஊடாகச் செல்ல வேண்டாம். ஓடிக்கொண்டிருக்கும் 6 அங்குல அளவிலான நீர் உங்களை வீழ்த்திவிடும். நீங்கள் நீரினுள் நடந்து செல்ல வேண்டியிருப்பின், நீர் ஓடிக்கொண்டிருக்காத பகுதியினூடாக நடந்து செல்லவும். உங்களுக்கு முன் உள்ள நிலத்தின் உறுதித்தன்மையை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு தடியொன்றைப் பயன்படுத்தவும்.
* வெள்ளம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களினூடாக வாகனத்தைச் செலுத்த வேண்டாம். உங்கள் காரைச்சுற்றி வெள்ள நீர் மட்டம் உயருமாயின், பாதுகாப்பாகச் செல்ல முடியுமாயின் தங்கள் காரை அங்கேயே விட்டு விட்டு  உயர்வான இடத்திற்குச் செல்லவும். வெள்ளச் சூழ்நிலைகளில் வாகனத்தைச் செலுத்துவதாயின் பின்வரும் குறிப்புகளைக் கவனிக்கவும்:
* ஆறு அங்குல நீர் மட்டம் பெரும்பாலான பிரயாணிகள் காரின் அடிப்பாகத்தை எட்டிவிடும். வாகனம் அப்படியே நின்று விடுதல் சாத்தியமாகும். § ஓர் அடி நீர் மட்டம் பல வாகனங்களை மிதக்கச் செய்யும். § இரண்டு அடி மட்ட ஓடிக்கொண்டிருக்கும்  நீர் பிக்அப் வண்டிகள் உட்பட பல வாகனங்களைக் கொண்டுசெல்லலாம்.

 

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவாரி JEV_FEBRUARY=பெபரவாரி 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1