• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு

மண்சரிவுகள்

அபரிமிதமான மழைவீழ்ச்சி, நிலத்தின் மாதிரி, காடழிப்பு, திட்டமிடப்படாத காணிப்பயன்பாட்டு நடவடிக்கை முறைகள் ஆகியவை இந்த சமூக இயற்கை ஆபத்தைத் ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்கின்றன. பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் மண்சரிவினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

மண்சரிவுகள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் முகவர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமாகும். மண்சரிவுச் சூழ்நிலைகள் பற்றிய விபரங்கள் பற்றி அறிவதற்கான தொடர்புகளுக்கு:
பணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (தொலைபேசி.
தலைவர், மண் சரிவு பற்றிய சேவைகள் பிரிவு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (தொலைபேசி.

ஒட்டுமொத்த அனர்த்த சூழ்நிலைகளின்போது தொடர்புகொள்ள வேண்டிய முகவரி –
அவசரகால செயற்பாட்டு நிலையம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், (தொலைபேசி

மண்சரிவுகள் பற்றி நீங்கள் செய்யவேண்டியது:

மண்சரிவுக்கு முன்னர் (அல்லது இடிபாடுகள் விழுகின்றபோது)
* குத்தான சரிவுகள், மலை ஓரங்களுக்கு அருகாமை அல்லது வடிகான்களுக்கு அருகில் கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டாம்.
* உங்கள் பிரதேச மண்சரிவுகள் பற்றிய தகவல்களைப் கேட்டறிந்து கொள்க. குறிப்பாக மண்சரிவினால் பாதிப்படையக் கூடிய பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுவதுடன் உங்கள் ஆதனத்தின் மிகவும் பொருத்தமான ஆபத்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அவசியமெனின் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கைள் பற்றித் தெரிவிக்கப்படும்.

வீடுகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு:
* சரிவான இடங்களில் மூடு தாவரங்களை வளர்ப்பதுடன் தடுப்புச் சுவர்களைக் கட்டுதல்.
* சேறு சரிந்து ஓடும் பிரதேசங்களில் கால்வாய்களை அல்லது கட்டிடத்தைச் சுற்றி ஓடக்கூடியவாறு திருப்பச் சுவர்களை நிர்மாணிக்கவும்.

மண்சரிவு எச்சரிக்கை அடையாளங்களை அவதானிக்கவும்,
* மண்சரிவினால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பின், மிகக்கடுமையான மழைச்சூழ்நிலைகளில் விழிப்பாக இருக்கவும்.
* உங்களில் நில அமைப்பில் சரிவுகளில் மழைநீர் வடிகான் (குறிப்பாக வழிந்தோடும் நீரினால் மூடப்பட்டுள்ள இடங்களில்) நில நகர்வு, சிறிய சரிவுகள், நீர் ஓட்டம், அல்லது மரங்கள் தொடர்ச்சியாக சாய்ந்து கொண்டு செல்லுதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
* கதவுகளும் ஜன்னல்களும் முதன்முறையாக ஒட்டிக்கொள்ளுதல் அல்லது இறுகுதல்.
* சாந்து, ஓடு, செங்கல் அல்லது அத்திவாரத்தில் புதிய வெடிப்புகள்.
* வெளிச்சுவர்கள், நடைபாதைகள் அல்லது படிகள் கட்டிடத்திலிருந்து விலகிச் செல்லுதல்.
* வீதிகள் அல்லது வாகன ஓடுபாதை போன்ற தரையில் அல்லது நடைபாதையில் மெதுவாக விருத்தியடைந்து அகன்ற வெடிப்புகள் தோன்றுதல்.
* சரிவின் அடியில் உதைப்பு நிலம் தோன்றுதல்.
* தரை மேற்பரப்பில் நீர் புதிய இடங்களில் உடைத்துச் செல்லுதல்.
* வேலிகள், தடுப்புச் சுவர்கள், பயன்பாட்டுக்கான கம்பங்கள் அல்லது மரங்கள் சரிதல் அல்லது நகர்தல்.
* வாகனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது சரிந்த நடைபாதைகள், சேறு, வீழ்ந்த பாறைகள் மற்றும் ஏனைய அடையாளங்களை காணுதல் (வீதி ஓரங்களில் உள்ள கரைக்கட்டுகள் குறிப்பாக மண்சரிவினால் பாதிப்படையும்).

மண்சரிவு அல்லது இடிபாடுகள் வீழ்தல் இடம்பெற்றால் செய்ய வேண்டியவை:
* விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பதுடன் பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுதல்.
* நீங்கள் நீரோடை அல்லது கால்வாய்க்கு அருகில் இருப்பின் நீரோட்டத்தின் சடுதியான அதிகரிப்பு அல்லது குறைவையிட்டும் தெளிவான நீர் சேறு கலந்த நீராக மாறுவதையிட்டும் விழிப்பாக இருக்கவும். அத்தகைய மாற்றங்கள் நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதைச் குறிக்கலாம்.

 

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவாரி JEV_FEBRUARY=பெபரவாரி 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1