• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு எம்மைப் பற்றி அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய ...

தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை

தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவை (தே.அ.மு.பே) 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவத்திற்கான உயர் சபையாகும்.


தேசியப் பேரவையின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் அதன் உப தலைவர் பிரதம அமைச்சரும் ஆகும். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பின்வரும் விடயங்களுக்குப் பொறுப்பான கெளரவ அமைச்சர்கள் பேரவையின் உறுப்பினர்களாவர்; அனர்த்த முகாமைத்துவம், தேசிய கட்டிடம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி; மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள்,  சமூக நலனோம்புகை; புனர்வாழ்வு, புனரமைப்பு; சுற்றாடல்; உள்நாட்டலுவல்கள், சுகாதாரம், விஞ்ஞான, தொழில்நுட்பம், வீடமைப்பு; கரையோரப் பாதுகாப்பு; நீர்ப்பாசனம்; மின்வலு; பாதுகாப்பு; பொலிஸ்; நிதி; காணி; கடற்றொழில் நீரக வள மூலங்கள், வெளிநாட்டு அலுவல்கள், நீர் வழங்கல், நெடுஞ்சாலைகள்; நகர அபிவிருத்தி; கைத்தொழில் மற்றும் கல்வி. அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மாகாண சபையினதும் முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையுடன் சபாநாயகரினால் நியமிக்கப்படும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள், பேரவையின் செயலாளர் ஆகியோரும் அதன் உறுப்பினர்களாவர்.


பேரவையின் செயலகம் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் தாபிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் கட்டமைப்பு

 

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஏப்ரயில்JEV_MAY=மே 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2