• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு அமைப்புகள் வளிமன்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையில் உள்ள மிகப்பழைய அரசாங்கத் திணைக்களங்களில் ஒன்றாகும். 1948ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் தாபிக்கப்பட்டிருப்பினும், இலங்கையில் வளிமண்டலவியல் அவதானிப்புகள் 1850ஆம் ஆண்டு வரையான நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது. இலங்கையில் முறைமையான வளிமண்டலவியல் அவதானிப்புகளை ஆரம்பித்த பெருமை நாடளாவிய அடிப்படையில் வளிமண்டலவியல் நிலையங்களைத் தாபிப்பதில் அதிக அக்கறை செலுத்தியவரும் 1866 – 1883 வரை இலங்கை அளவையாளர் நாயகமாகச் சேவையாற்றியவருமான கேணல் பிறையர்ஸ் அவர்களையே சாரும். அவர் ஓய்வுபெறும்போது 50 மழைமானி நிலையங்களுக்கு மேலதிகமாக, மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, மற்றும் மேகம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் 14 பிரதான வளிமண்டலவியல் நிலையங்கள் இலங்கையில் இருந்தன.

1907இல் பெளத்தாலோக மாவத்தையில் கொழும்பு அவதான நிலையம் தாபிக்கப்பட்டதும், இலங்கையில் வளமண்டலவியல் தொடர்பான பணிகள் மேலும் விஞ்ஞான ரீதியானதாக மாறியது. கொழும்பு அவதான நிலையத்தின் முதலாவது அத்தியட்சகர் உதவி அளவையாளர் நாயகமான திரு. எச்.ஓ.பேணாட் ஆவார்.

1940களின் போருக்குப் பின்னர், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அவதானிப்பு நிலையத்தின் வளங்களில் அதன் தாக்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்தது. அழுத்தத்தின் விளைவாக விஞ்ஞான பணியாளர்களின் எண்ணிக்கையிலும் அவ்வாறே, விரிவாக்கம் மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆகியவற்றிலும் அதிகரிப்பு ஏற்பட்டது. பயன்படுத்துனர்களுக்கு மேலும் பயனுறுதியுடன் வளிமண்டலவியல் சேவைகளை வழங்குவதற்காக 1948 ஒக்டோபர் 1ஆம் திகதி விளமண்டலவியல் திணைக்களம் ஓர் அரசாங்கத் திணைக்களமாகத் தாபிக்கப்பட்டது. இந்தத் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் டாக்டர் டீ.ரி.தசநாயக்க ஆவார். அவர் இந்தப் பதவியில் 1958 ஜூலை 14 வரை சேவையாற்றினார்.

பிரதான தொழிற்பாடுகள்:
வளிமண்டலவியல், காலநிலையியல் மற்றும் வரையறுக்கப்பட்ட வானவியல் சேவைகளை வழங்குதல்.
வளிமண்டலவியல் தொடர்பான ஆபத்துகள் மற்றும் சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை சேவைகளை வழங்குதல்.
காலநிலை மாற்றம் பற்றிய தொழில்நுட்பச் செயற்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்தல்.

புதன்கிழமை, 31 ஜூலை 2013 04:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஏப்ரயில்JEV_MAY=மே 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2