• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு அமைப்புகள் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம்

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

2005 மே 13ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ தேசியப் பேரவையின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (அ.மு.நி) தாபிக்கப்பட்டது. தற்போது அ.மு.நி. அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சின் செயற்பரப்பின் கீழ் தொழிற்படுகின்றது.


அமைச்சுகள், மத்திய அரச அமைச்சுகள், பொதுக்கூட்டுத்தாபனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அதிகார நிர்வாகம், அவ்வாறே மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பின்வரும் குறிக்கோள்களை அடைவதற்கு அ.மு.நி. முயற்சிக்கும்.

தகுந்த அனர்த்த முகாமைத்துவத் தீர்மானங்களை மேற்வதற்கு இயலச் செய்வதற்காக பொருத்தமான முறைமைகளைப் பயன்படுத்தி ஆபத்து மற்றும் இடர் தொடர்பான தகவல்களை வழங்குதல்.

எதிர்காலத்தில் நிகழக்கூடிய இழப்புகளுக்கான இடர் குறைப்பு உபாயங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல்.

மிகச்சரியான முன்னெச்சரிக்கைகளை வழங்கி அவற்றின் பயனுறுதியான பரம்பலை உறுதிப்படுத்தல்.
அனர்த்தங்களின் போது விரைவாகவும் பயனுறுதியாகவும் பதில் நடவடிக்கை மேற்கொள்வதற்கன ஆற்றலைக் கட்டியெழுப்புதல்.
தகுந்த அவசரகாலத் தொழிற்பாட்டு முகாமைத்துவத்தை இயலச்செய்தல்.
அனர்த்தத்துக்குப் பிந்திய செயற்பாடுகளின் பயனுறுதியான முகாமைத்துவம்.
அனர்த்ததத்தின் போது சமுதாயத்தின் மீளலை விரிவாக்கம் அடையச் செய்வதற்காக இடர்கள் பற்றிய அதன் புரிந்ததுணர்வை மேம்படுத்தல்.

நாட்டில் ஒட்டுமொத்த அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கை முறையை முகாமைத்துவம் செய்வதில் அமைச்சுகள், திணைக்களங்கள், முகவராண்மைகள், அதிகார சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் தேசிய, ஈடைநிலை மற்றும் கிராம சேவகர் மட்டங்களிலும் இராணுவப்படைகள், பொலிஸ், சர்வதேச மற்றும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடனும் அ.மு.நி. ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்ளும்.

நிலையத்தின் பரந்த செயற்பாடுகள் பணிப்புரை வழங்கல், வழிகாட்டல்களை வழங்குதல், வசதியளித்தல், ஒருங்கிணைப்புச் செய்தல் கண்காணித்தல்,  அவசியமானவிடத்து பின்வருபவை தொடர்பான செயற்பாடுகளை நேரடியாக நடைமுறைப்படுத்தல் அல்லது வலுவூட்டல்.

அனர்த்த இடர் மதிப்பீடு, தரவுகள் சேகரித்தல், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு.
அனர்த்த முகாமைத்துவத் தொழில்நுட்பம், தணித்தல் மற்றும் அனர்த்த இடர் குறைப்பு
 எதிர்வுகூறுதலும் முன்னெச்சரிக்கையும்.
அனர்த்தங்களின் போது அவசரகால தொழிற்பாடுகள்.
தயார்நிலைத் திட்டமிடல் (தேசிய, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம சேவகர் மட்டங்களில்)
பயிற்சியளித்தல், அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்
தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும் தேசிய அவசரகால தொழிற்பாட்டுத் திட்டத்தையும் வகுத்து நடைமுறைப்படுத்தல்.
அனர்த்தங்கள் பற்றிய வரைபடங்களை வரைதல், இடர் மதிப்பீடு, அனத்தம் தணிப்பு, அனர்த்த தயார்நிலை, அவசரகாலத் தொழிற்பாடுகளின் முகாமைத்துவம் மற்றும் அனர்த்தத்துக்குப் பிந்திய செயற்பாடுகள் ஆகியவை தொடர்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல், ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் கண்காணித்தல்.
இயற்கை அனர்த்தங்களுக்கான முன்னெச்சரிக்கைகளை வழங்குதல் மற்றும் அத்தகைய எச்சரிக்கைகளை பாதிக்கப்படச்கூடிய மக்களுக்கு உரிய காலத்தில் பரப்புதல் பற்றிய விடயங்களில்  அதிகாரமளிக்கப்பட்ட தொழில்நுட்ப முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
அனர்த்தங்களின்போது அவசர கால பதில் நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீளல் நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்புச் செய்தலும் வசதியளித்தலும்.

 

தொலைபேசி:- +94-11- 2136136 தொலைநகல் :- +94-11-2670079
http://www.dmc.gov.lk

செவ்வாய்க்கிழமை, 22 மே 2012 07:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

மார்ச் 2020
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4