• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு அமைப்புகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (தே.க.ஆ.நி) 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  தே.க.ஆ.நி. அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயற்பரப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. தே.க.ஆ.நி. பிரத்தியேகமான பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் மாதிரியான ஓர் அரச துறை நிறுவனமாகத் தாபிக்கப்படாமல், அது அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் தாபிக்கப்பட்டதாகும். எனவே தே.க.ஆ. நிறுவனத்தின் வழிகாட்டல், நிர்வாக, நிதி மற்றும் முகாமைத்துவத் தொழிற்பாடுகள் ஆகியவற்றுக்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இடைக்கால முகாமைத்துவ சபை (இ.மு.ச) தாபிக்கப்பட்டது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (தே.க.ஆ.நி) பிரதான குறிக்கோள் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதி விசேட தொழில்வாண்மை சார் சேவைகளை வழங்குவதன் மூலம் புத்தாக்க அனர்த்தம் பற்றிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஊடாக அனர்த்த தணிப்பு, தயார்நிலை மற்றும் பாதுகாப்பு கலாசாரத்தைப் பரவச் செய்து மேம்படுத்தல். கடந்த 25 ஆண்டுகளில், தே.க.ஆ.நி. உன்னதமான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, தனியார் துறை மற்றும் அரச துறை நிறுவனங்களின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தே.க.ஆ. நிறுவனத்தின் சேவையை நாடுகின்றனர். இந்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எவ்விதமான சந்தைப்படுத்தல் அல்லது விளம்பர உபாயங்கள் எதுவுமே இன்றி கடந்த 25 வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மற்றும் நற்பெயரின் அடிப்படையிலேயே எமது சேவைகளை நாடியுள்ளனர். பல வழிகளில் எமது பலத்தை வலுவூட்டுவதற்கு சாதகமான விதத்தில் விரிவாக்கம் செய்வதற்கும் வலுவூட்டுவதற்கும் எப்போதும் பங்களிப்புச் செய்த அவர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பது எமது அதிஸ்டமாகும். தற்போது நாம் நவீன ஆய்வுகூடத்தையும் கருவிகளையும் விசேட மனித வலுவையும் கொண்டுள்ளோம்.

தே.க.ஆ. நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகள் -

புவியியல் தொழில்நுட்பம் மற்றும் அத்திவாரப் பொறியியல், மற்றும் மண் ஆராய்வும் பரிசோதனையும்.
மண்சரிவு தொடர்பான ஆய்வுகள், தணித்தல் மற்றும் சாய்வை உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை மற்றும் உண்மைநேர எதிர்வுகூறல்
மனித குடியேற்றத் திட்டமிடல், செலவும் பயன்மிக்க வீட்டு வடிவமைப்பு மற்றும் பயிற்சி.
நிர்மாணப் பொருட்களின் பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு, கைத்தொழிலுக்கான வழிகாட்டியும் பயிற்சியும்.
சுற்றாடல் தரக்கண்காணிப்பும் ஆலோசனை வழங்கலும், சுற்றாடல் தாக்க மதிப்பீடு, உபாயத்திட்ட சுற்றாடல் மதிப்பீடுகள், நீர்நிலை சுகாதார இடர் மதிப்பீடு மற்றும் முகாமைத்துவம், வளி, நீர், கழிவு நீர், மண் ஆகியவற்றைக் கண்காணித்தலும் சுற்றாடல் இசைவுக்காக ஒலி மற்றும் அதிர்வுக் கண்காணிப்பு.
கட்டிடக் கருத்திட்டங்களுக்கான கட்டிடக்கலை, கட்டமைப்பு, பொறியியல் மற்றும் கேள்விப்பத்திர ஆவணங்களைத் தயாரித்தலும் கேள்விப்பத்திர மதிப்பீட்டு அறிக்கைகளும் அவை தொடர்பான கட்டமைப்புகளிலும் ஒட்டுமொத்த ஆலோசனைச் சேவைள்.
வீட்டு நிர்மாண தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்.
அனர்த்த குறைப்பு பற்றிய ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்.
மண்சரிவு ஆபத்துகள் பற்றிய வரையறுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை சேவைகள் பற்றிய ஆராய்ச்சியும் அவற்றை வழங்குதலும்.


முகவரி:- 99/1, ஜாவத்தை வீதி, கொழும்பு 05 தொலைபேசி :- 2588946, 2503431 தொலைநகல்:- 2502611

இணையதளம்: www.nbro.gov.lk

 

 

 

 

சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010 11:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஏப்ரயில்JEV_MAY=மே 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2