• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு நிகழ்ச்சி திட்டப்பணி

அபிவிருத்திக் கருத்திட்டங்கள்

அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சும் அதன் மூன்று முகவராண்மைகளும் அனர்த்தங்களின் தாக்கத்தைத் தணிப்பதற்கும் குறைப்பதற்கும் சமுதாயத்துடன் நெருக்கமாகச் செயலாற்றுகின்றன. 2004 டிசம்பர் 26ஆம் திகதிய சுனாமி நிகழ்வுக்குப் பின்னர் அனர்த்தங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் இந்த அமைச்சு தாபிக்கப்பட்டது. அது ஆரம்பிக்கப்பட்டது முதல்இ அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு சமுதாய பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தி 'பாதுகாப்பான இலங்கையை நோக்கி' என்னும் அதன் நோக்கை அடைவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. அமைச்சு அதன் முகவராண்மைகள் ஊடாகவும் ஏனைய பங்கீடுபாடு உடையவர்களின் ஒத்துழைப்புடனும் பல தணிப்பு மற்றும் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2009இல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பிரதான கருத்திட்டங்களில் சில பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

தெரிவுசெய்யப்பட்ட கரையோர பிரதேசங்களில் பல்வகை அபாய முன்னெச்சரிக்கைக் கோபுரங்களை நிறுவுதல்தெரிவுசெய்யப்பட்ட கரையோர இடங்களில் பல்வகை அபாய முன்னெச்சரிக்கைக் கோபுரங்களை நிறுவுவதற்கான கருத்திட்டம் ஒன்று முடிவடைந்துள்ளது. இந்தக் கோபுரங்கள் அனைத்தும் VSAT (மிகச் சிறிய நுண்துளை முனையம்) செய்மதி தொடர்பாடல் முறைமை ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களுக்கு நன்கு முன்கூட்டியே அனர்த்தம் பற்றிய எச்சரிக்கைகளைப் பரப்புவதற்கு இந்த முறைமை உதவுகின்றது. கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் எச்சரிக்கைக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது தொழிற்படும் கோபுரங்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆகும். 2010இல் மேலும் 25 கோபுரங்களை நிறுவுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கருத்திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் ரூபா.1731 மில்லியன் ஆகும்.
மேலும் விபரங்களுக்கு:- பணிப்பாளர் NCDM தொலைபேசி:- 2681985

அவசரகால பதில் நடவடிக்கை முறைமைஇந்தக் கருத்திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. கேட்போர் கூடம் அடங்கலாக முழுமையாக எல்லா வசதிகளையும் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்று அகலவத்தையில் நிர்மாணிக்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக, நீண்ட காலமாகத் தேவைப்பட்டிருந்த தீயணைப்பு மற்றும் காப்பாற்றல் நிலையக் கட்டிடம் ஒன்று களுத்துறையில் நிர்மாணிக்கப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளில் சமுதாயங்களையும் பங்கீடுபாடு உடையவர்களையும் பயிற்றுவிப்பதில் பயிற்சி நிலையம் உதவும். மேலும், அவசர கால பதில் நடவடிக்கை பற்றிய விசேட பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று தென்கொரியாவில் இரண்டு உள்நாட்டுக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக தென்கொரியாவைச் சேர்ந்த நிபுணர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு உள்நாட்டுப் பங்காளர்களுக்கு பல பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தினர். உத்தேசிக்கப்பட்ட மொத்தத் தொகையான ரூபா 200 மில்லியன் நன்கொடையாக கொரிய அரசாங்கத்தினால் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் ஊடாக வழங்கப்பட்டது
மேலதிகச் தகவல்களுக்கு:- Director – NCDM Tel:- 2681985

டொப்ளர் வானிலை ராடார் முறைமையைப் பெறுதல்நாட்டிற்கு மேலாக நிகழும் வானிலை மாற்றங்களை அடையாளம் காண்பதற்கு டொப்ளர் வானிலை ராடார் முறைமையைப் பெறுவேண்டியுள்ளது. குறிப்பாக மோசமான வானிலை நிலவும் காலங்களில் சிறந்த காலநிலை முன்னறிவிப்புகளைச் செய்வதற்கு இந்த முறைமை வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு உதவும். தெனியாயவில் கொங்கல மலைச்சிகரத்தில் பொருத்தப்படவுள்ள இந்த ராடார் முறைமை கொழும்பிலிருந்தவாறே இயக்கப்படும். இந்தக் கருத்திட்டத்தின் மொத்த உத்தேச செலவு ரூபா 510 மில்லியன் ஆகும்.

மேலதிக தகவல்களுக்கு:- பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்களம் தொலைபேசி:-2694104

முப்பத்தெட்டு தன்னியக்க வானிலை நிலையங்களை (த.வா.நி) நிறுவுதல்தன்னியக்க வானிலை அவதானிப்பு நிலையங்களை ஆரம்பிக்கும் வரையும் வானிலை அவதானிப்பில் கையினால் இயக்கும் முறை தான் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் வெப்பநிலை, ஈரப்பதன், காற்று, கதிர்வீச்சு, மழைவீழ்ச்சி மற்றும் வளியமுக்கம் ஆகியவற்றை அளவிடும் 38 தன்னியக்க வானிலை நிலையங்கள் (த.வா.நி) 38 இடங்களில் நிறுவப்பட்டன. இந்த துாரத்தில் உள்ள இடங்களைத் தொடர்புபடுத்தும் தொடர்பாடல் முறைமை செய்மதி (VSAT) ஊடாக மேற்கொள்ளப்படுவதுடன் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எல்லா இடங்களிலுமிருந்து வளிமண்டலவியல் தலைமை அலுவலகத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ரூபா 720 மில்லியன் பெறுமதியான இந்த முறைமை ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவரின் ஊடாக வழங்கப்படும் ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான நன்கொடையாகும்.

மேலதிக தகவல்களுக்கு:- பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்களம் தொலைபேசி:-2694104

அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பைக் குறைத்தல்.நாட்டின் துரிதமான அபிவிருத்தி காரணமாக, சுற்றாடலைப் பற்றி அதிக சிரத்தை மேற்கொள்ளப்படாமல் பல நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிர்மாணங்களில் சில இயற்கையாக நீர் ஓடும் பாதைகளைப் பாதிக்கின்றன. ஆதலால், மிகக் கடுமையாக மழை பொழியும் காலங்களில் பரந்த அளவிலான பிரதேசங்கள் நீரில் மூழ்குகின்றன. இந்தக் கருத்திட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பைக் குறைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் முன்மொழியப்பட்டது. இந்தக் கருத்திட்டம் முறையாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விரிவான வெள்ள பாதிப்பைக் குறைப்பது பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்கும் செயற்பாடுகள் 2010 முதல் ஆரம்பிக்கப்படும். பொலன்னறுவை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக புனரமைப்புப் பணிகளும் தற்போதுள்ள வாய்க்கால்கள், வடிகான்கள், நீரோடைகள், குழங்கள் ஆகியவற்றைத் துப்புரவு செய்யும் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்கும் பல சிறிய அளவிலான கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரூபா 300 மில்லியன் செலவிலான இந்தக் கருத்திட்டம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலதிக தகவல்களுக்கு:- பணிப்பாளர் நாயகம், வளிமண்டலவியல் திணைக்களம் தொலைபேசி:-2694104

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் சரிவுகளை தணித்தல் மற்றும் உறுதிப்படுத்தல் கருத்திட்டம்நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் இலங்கையில் மண்சரிவினால் பாதிக்கப்படும் பிராந்தியங்களாகக் கருதப்படுகின்றன. அண்மைக் காலத்தில் இந்தப் பிரதேசங்களில் ஏற்பட்ட பல மண்சரிவுகளின் காரணமாக மிக பரந்த பிரதேசங்களை மனித குடியிருப்புக்குப் பொருத்தமற்றவையாக ஆக்கியுள்ளதுடன் பல உயிரிழப்புகளும் காணி இழப்புகளும் நிகழ்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்திட்டம் இந்தப் பிரதேசங்களில் பாதிக்கப்படக்கூடிய சரிவான இடங்களை உறுதிப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். சரிவை உறுதிப்படுத்தல் மற்றும் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, சமுதாயங்களின் ஆற்றலை அதிகரிப்பதற்காக பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களுக்கான பல அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மண்சரிவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பேராதெனிய மற்றும் பதியத்தலாவை ஆகிய இடங்களில் தற்போது நடைபெறுகின்றன. இதற்கான உத்தேச செலவு ரூபா 300 மில்லியன் ஆகும்.

மேலதிக தகவல்களுக்கு:- திணைக்களத் தலைவர், மண்சரிவு ஆய்வுகள் 2589943

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ ஆற்றலைக் கட்டியெழுப்புதல்

ஆய்வையும் அவ்வாறே அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளைப் பிரயோகிப்பதற்கு சமுதாய அடிப்படையிலான நிறுவனங்களுக்கு உதவியளித்து அமைச்சினதும் அதன் முகவர்களினதும் ஆற்றலைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கோளாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒத்துழைப்புடன் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு மேற்கொள்கின்றது. மேலும், இலங்கையை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பானதாக ஆக்கும் பத்து வருட நடவடிக்கைத் திட்டமான “முழுமையான கருத்திட்டம்” ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு UNDP அதன் உதவியை வழங்குகின்றது. கருத்திட்டத்தின் அண்மைக்கால நிறைவேற்றங்களில் ஒன்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக முகாம் பிரதேசம் நீரினுள் அமிழும் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மெனிக் பாம் முகாமுக்கான பாரிய வடிகாலமைப்புத் திட்டமொன்றை நிர்மாணித்தமையாகும்.

மேலதிக தகவல்களுக்கு:- ஒருங்கிணைப்பாளர் UNDP 2136290

வெள்ளிக்கிழமை, 06 ஜூன் 2014 07:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஏப்ரயில்JEV_MAY=மே 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2