• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு

தேசிய பாதுகாப்புத்தின (NSD) நினைவுவிழா

2006 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்புத் தினமானது  வருட நிகழ்வாகும். இவ்வருடம் மாவட்ட செயலகம் மற்றும் வடமேல் மாகாணசபை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து தேசிய பாதுகாப்பு நினைவுவிழா குருணாகலில் கொண்டாடப்பட்டது. டிசெம்பர் 26 ஆம் திகதியை தேசிய பாதுகாப்பு தினமென 2006 ஆண்டில் அமைச்சரவை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு தினம் முதன்முதலில் கண்டியில் கொண்டாடப்பட்டது. அனர்ந்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிகழ்ச்சித்திட்டங்கள் முறையே இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் இடம்பெற்றன. தேசிய பாதுகாப்பு தின நினைவு கொண்டாட்டங்களில் பலதரப்பட்ட இயல்புகள் இருந்தபோதும், அனர்த்தங்கள் பற்றிய விழிப்பூட்டல் மற்றும் அதன் அபாயத்தை தவிர்க்கும் முறைகளில் நிறுவனங்களின் பங்களிப்பும் அது பற்றி சமூகங்களுக்கு உணர்த்துவதும் ஆகிய இரு முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அது அமைந்தது.
மேலும், மாகாணக் கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கிடையில் பலதரப்பட்ட வயதுப் பிரிவுகளில் கட்டுரை, ஓவியப்போட்டிகளை அனர்த்த முகாமைத்துவம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நாட்டின் பொறுப்புள்ள வருங்கால பிரசைகளாகிய மாணவர்கள் தாம் பெற்ற அனர்த்த முகாமைத்துவம் பற்றிய அறிவு சம்பந்தப்பட்ட செய்தியை முன்னெடுத்து செல்ல உதவி செய்வது என இப்போட்டிகள் இறுதி நோக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வருட நினைவுவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கௌரவ ரத்னசிறி விக்கிரமநாயக்க, பிரதம அமைச்சர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இத்தேசிய நிகழ்வில் கௌரவ அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள், மத்திய அரசு மற்றம் மாகாணசபை அமைச்சர்கள் அத்தோடு உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2014 09:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவாரி JEV_FEBRUARY=பெபரவாரி 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1