• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
 • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
 • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு அமைப்புகள் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்

தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம்

அமைச்சரவை மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தேசிய அனர்த்த நிவாரண நிலையம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ளது. 2005 டிசம்பர் 08 ஆம் திகதிய, 1422 ஃ22 இலக்க வர்த்தமானியின் கீழ் வரும் அனர்த்தம் சம்பந்தப்பட்ட விடயமான ஆயத்தம் செய்தல் மற்றும் மீட்டெடுப்பு மற்றும் விடையிறுத்தல் ஆகியவை நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், அனர்த்தத்திற்கு முந்திய மற்றும் அனர்த்தத்திற்குப் பிந்திய நடவடிக்கைகளை பயனுறுதி உடையதாக கையாள்வதற்கு தேவையான நிதியை அமைச்சுக்கு ஒதுக்கல் போன்றவைகளையும் உள்ளடக்கும்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ்வரும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றம் பரந்துபட்ட சமூகசேவைகள் திணைக்களத்தின் அனர்த்தப்பிரிவு ஆகியவை தற்போதைய புதிய அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் விளங்குகிறது. அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்வரும் தொழிற்பாடுகள் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.

 • அழிவுகளின் தாக்கங்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடுதலும் அமுல்படுத்தலும்
 • அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டல்
 • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குழுக்களுடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் அனர்த்தங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கைகளை கண்காணித்தல்., ஒருங்கிணைத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
 • இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் மற்றும் மீட்புப்பணிகளை நடைமுறைப்படுத்தல்.
 • அனர்த்தங்களினால் தகர்த்தெறியப்பட்ட வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் மீளத்தாபிப்பதற்குமான மீட்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
 • உதவிக்கரம் நீட்டுதல் மற்றும் மீளப்பெறுதல் ஆகியவை ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிலைத்துநிற்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் பங்களிப்பு செய்தல்.
 • அனர்த்த முகாமைத்துவத்தினால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் அபாயங்கள், தீங்குகள் சார்பாக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை சிறுவர் ஆகியோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
 • ஆபத்துக்களை குறைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை திட்டமிடலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்
 • மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தை அடைவதற்கென 2006 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவென திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கையாவன :
 • அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேவைகள் வழங்கப் படுவதை உறுதிச்செய்வதற்கு நடைமுறையிலுள்ள நிவாரண உதவிகளை பரிசீலித்தலும் மற்றும் மீளொழுங்கு படுத்தலும்
 • ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்தவள நிலையங்களை தாபித்தலும்
 • அனர்த்தங்களுக்குட்படும் பகுதிகள் பேரழிவுகளையும் மற்றம் அதன் அபாயங்களையும் குறைப்பதற்கு உதவும் அனர்த்த தணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப் படுத்தல். (உ-ம்) : மழை நீரை தேக்கி வைக்கும் நிர்மாணப் பணிகள
 • களுத்துறை மாவட்டத்தில் வெள்ள அபாயத்திற்குட்படும் பிரதேசங்களை அடையாளம் இடுதல்.
 • அனர்த்தங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் குழுக்களை பாடசாலை மட்டத்தில் உருவாக்குதல்.
 • அனர்த்த முகாமைத்துவ ஒன்றிணைப்புக்குழுவை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உருவாக்குதல்
 • பிரதேச மட்டத்தில் அனர்த்தத்திற்கு உதவிக்கரம் நீட்டுதல், மற்றும் செயற்பாட்டு திட்டம் ஆகியவற்றை ஒவ்வொரு பிரதேச செயலாளருக்கும் தயாரித்தல்
 • இலங்கைக்கான தகவல் முறைமை மற்றும் வலைத்தளம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல்.
 • மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி (ஆழிப் பேரலை) மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டர்களுக்கு உரித்தான முறையில் அவர்கள் மத்தியில் வருவாயை ஈட்டிக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.

அனர்த்த அபாயங்களை முகாமைத்துவம் செய்வதற்கான 'வழிமுறை' (சுழயனஅயி) எனும் 10 வருட விரிவான நிகழ்ச்சித்திட்டமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் (ருNனுP) உதவியுடன் இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் அபிவிருத்தித்திட்ட திட்டமிடல் மற்றும் தற்போது நடைமுறை யிலுள்ள மற்றும் கடந்தகாலங்களில் அனர்த்த அபாய முகாமைத்துவம் சார்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் சம்பந்தப்படும் வகையில் நோரொத்த ஏழு பிரதான கருப்பொருளை  மையமாகக் கொண்ட பகுதிகளாக இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

கொள்கை, நிறுவனம் சார் ஆணைகள், மற்றும் நிறுவனம் சார் அபிவிருத்தி; தீமைகள், தாக்கங்கள் மற்றும் அபாயங்கள் சம்பந்தப்பட்ட மதிப்பீடு;  பல தீமைகளை முன்கூட்டியே அறிவிக்கும் முறைமைகள், தணித்தல் மற்றும் அனர்த்த அபாய குறைப்பும் அதனை அபிவிருத்தித் திட்டமிடலுடன் இணைத்தலும் சமூகத்தை மையமாகக் கொண்ட அனர்த்த அபாயங்களை முகாமைத்துவம் செய்தல். பொதுமக்களை விழிப்பூட்டல், கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கும் முகமாக இலங்கைக்கான அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் மூலோபாயம் முன்மொழியப்பட்டுள்ளது.

வழிமுறை, தொகுதி – 2 (சுழயனஅயி எழட. 2)  எனும் தற்போதைய இவ்வாவணமானது, வழிமுறையின் அந்த 7 பிரிவுகளினதும் கீழ்வரும் உத்தேச விளைவுகள் ஒவ்வொன்றிற்குமான கருத்திட்ட முன்மொழிவுகளை கொண்டுள்ளது.  மேலும் ஈடுபட்டுள்ள முகவர் நிலையங்கள், குறிக்கோள்கள், விளைவுகள், நடவடிக்கைகள், காலஎல்லை மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் பூகோள ரீதியான பகுதிகள், அத்தோடு தேவைப்படும் வரவு – செலவு, நிதியிடல் நிலைமை மற்றும் முன்னெடுத்துச் செல்லும் முகவர் நிலையம் ஆகியவை சம்பந்தப்பட்ட தேவையான எல்லா விபரங்களையும் இந்த கருத்திட்ட முன்மொழிவுகள் கூட்டிணைத்துள்ளன.

முகவரி:- இல. 189, காலி வீதி, கொழும்பு 03. தொலைபேசி:- +94112431590 தொலைநகல்:- +94112431593

இணையதளம்: http://www.ndmc.gov.lk

செவ்வாய்க்கிழமை, 22 மே 2012 07:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவாரி JEV_FEBRUARY=பெபரவாரி 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1